விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 வது சீசன் நிகழ்ச்சியின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் ரக்ஷிதா சுரேஷ். அந்த போட்டியில் ரன்னர் அப் ஆன பிறகு பரவலான பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன் பின்னர் இவர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடி இருக்கிறார். கடந்தாண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆன பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்ற ‘சொல்’ என்கிற பாடலை பாடியதும் ரக்ஷிதா தான்.
பல்வேறு வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வரும் ரக்ஷிதா, அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சி மு டிந்து விமான நிலையம் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவர் சென்ற கார் எ தி ர்பாராத விதமாக வி ப த்தி ல் சி க் கி உள்ளது. சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரக்ஷிதா சுரேஷ், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஷா க் கி ங் செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “நான் ச மீபத்தில் பெரிய வி ப த் தைச் சந்தித்தேன். அப்போது என்னுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் அந்த 10 நொடியில் வந்து போனது”.”காரில் இருந்த ஏர் பேக்கால் உயிர் தப்பித்தேன். சில சின்ன கா ய ங் களுடன் உயிர் தப்பினோம் என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். ரக்ஷிதாவின் இந்த பதிவைப் பார்த்து ஷா க் ஆன அவரது நண்பர்களும், ரசிகர்களும், அவர் விரைவில் நலம் பெற வேண்டுவதாக பதிவிட்டு வருகின்றனர்.