5 வருட காதலியை இன்று கரம் பி டித்த குக் வித் கோ மாளி புகழ்…!! இணையத்தில் வை ர லாகும் அழகிய திருமண புகைப்படங்கள்…!! வாழ்த்துக்களை தெரிவிக்கும் திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்…!!

General News

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் புகழ். இவரது காமெடிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நீண்ட நாள் காதலியை இன்று திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்தியை முன்பே பார்த்தோம். அந்த வகையில் சற்று முன் அவரது திருமணம் நடந்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் கடந்த ஐந்து வருடங்களாக பென்சியா என்ற பெண்ணை காதலித்து வந்தார் என்பதை நிகழ்ச்சியில் ஒரு முறை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி தங்களது திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களது திருமணம் ஈ சி ஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் புகழ் மற்றும் பென்சியா இவர்களின் திருமண வரவேற்பு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புகழ்-பென்சியா திருமணம் குறித்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வை ர லாகி வரும் நிலையில் ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *