விடாமுயற்சி படத்திற்காக புதிய கெட்டப்பில் நடிகர் அஜித்...!! வேற லெவலில் உள்ள லுக்...!! எ தி ர்பார்ப்பில் ரசிகர்கள்!!

விடாமுயற்சி படத்திற்காக புதிய கெட்டப்பில் நடிகர் அஜித்…!! வேற லெவலில் உள்ள லுக்…!! எ தி ர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Cinema News Image News

அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் பல நாட்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என ரசிகர்கள் எ தி ர்பார்த்த நிலையில் அது அப்படியே நடந்துள்ளது.

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டு லைகா நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ‘ஏகே 62’-லிருந்து விக்னேஷ் சிவன் வி ல க்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பு தரப்பு கதையில் மாற்றங்களை செய்ய சொன்னதாகவும், அதற்கு விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ளாததால் படத்திலிருந்து அவர் வி லகப்பட்டார் என தகவல் வெளியானது.

இந்த சூழலில் அஜித் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதனை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து லைகா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம். இதனால், நேபாளம், பூடான் நாடுகளுக்கு பைக் டூர் சென்றிருந்த அஜித், தற்போது சென்னை திரும்பிவிட்டாராம்.

மொத்தமே 70 முதல் 90 நாட்களுக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட மகிழ் திருமேனி பிளான் செய்துள்ளாராம். இதன் காரணமாக விடா முயற்சி படப்பிடிப்பு முடியும் வரை அஜித் பைக் ட்ரிப் செல்ல வாய்ப்பி ல் லை என தெரிகிறது. அதேநேரம் இந்தப் படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்ற முடிவு செய்துள்ளாராம். கடந்த சில வருடங்களாகவே தான் நடித்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித். ஆனால், இந்தப் படத்தில் அஜித்தின் லுக் வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *