சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மஹாலக்ஷ்மி. . அந்த வகையில் ராதிகாவின் வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் இல்லாத ராதிகாவின் சீரியல்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர் ராடான் தயாரிப்பில் ஏராளமான தொடர்களில் நடித்திருக்கிறார்.
நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் சில வருடங்களிலேயே மகாலட்சுமி தன் கணவருடன் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
மேலும் குறிப்பிட்டு சொல்லும் வகையில் Office, ஒரு கை ஒசை உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான LIBRA புரோடக்ஷன்ஸ்-ன் உரிமையாளர் LIBRA ரவியை நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் நளனும் நந்தினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். மேலும் தற்போது அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துகளை தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.