ஸ்பிளிட்ஸ்வில்லா மற்றும் கம்பாலா இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும், மைனே காந்தி கோ நஹி மாரா போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காகவும் அறியப்பட்ட இந்திய நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத். ட்விஸ்ட்டுகள், சர்ச்சைகள், சண்டைகள் என பரபரவென கடக்கும் Splits Villa நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்.
மாடலாக வாழ்க்கையை தொடங்கியவர், சீரியல்கள், விளம்பரங்கள் என சினிமா தொடர்பான பல தொழில்கள் செய்து வந்தார். அவருடைய வீட்டிற்கு இன்று எதேச்சையாக சென்ற நண்பர், அவரை பிணமாக பார்த்திருக்கிறார். அதிகப்படியான போதை பொருள் உயிரை குடித்திருக்கலாம் என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தேரி லோகண்ட்வாலாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 11-வது மாடியில் வசித்துவந்தார். நேற்று அவர் திடீரென பாத்ரூமில் மயங்கி விழுந்தார்.
இதை வீட்டு வேலைக்காரப் பெண் பார்த்து, கட்டட வாட்ச்மேனுக்குத் தகவல் கொடுத்தார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சோதித்துப் பார்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக ஆதித்யா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.