பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் 2018 இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடராகும். ஷீலாவுடன் சுஜிதா, ஸ்டாலின், வி.ஜே.சித்ரா, குமரன் தங்கராஜன், லாவண்யா, ஹேமா ராஜ்குமார், வெங்கட் ரெங்கநாதன், சரவண விக்ரம் மற்றும் வி.ஜே.தீபிகா லட்சுமணபாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 9 டிசம்பர் 2020 அன்று வி.ஜே.சித்ராவின் ம ர ண த்திற்குப் பிறகு,
அவரது “முல்லை” பாத்திரத்திற்குப் பதிலாக காவ்யா அறிவுமணியும் அதைத் தொடர்ந்து லாவண்யாவும் நடித்தனர். மேலும், வி.ஜே.தீபிகாவின் “ஐஷு” வேடத்தில் முதலில் வைஷாலி தனிகா நடித்தார், அதற்கு பதிலாக சாய் காயத்ரி புவனேஷ் நடித்தார், தற்போது மீண்டும் விஜே தீபிகா நடிக்கிறார். இந்த தொடர் கடந்த சில வாரங்களாக முடிவுக்கு வரப்போகிறது என்று கூறப்பட்டு வருகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.
கதை என்னவோ பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவது போல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அசீரியால் 1200 எபிசோட்களை கடந்துள்ளது. இந்த தொடரில் மீனாவின் மகளாக நடித்த குழந்தை தான் கயல் பாப்பா. கயலின் உண்மையான பெயர் ஹாசினியாம். அவரது அம்மா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கயல் பாப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலக போகிறார் என கூறியுள்ளார். அதற்கு பதில் கயலின் அக்காவை கேட்டுள்ளார்களாம். அவரது அக்காவும் நடிப்பதில் ஆர்வமாக உள்ளாராம்.