இந்த வயதிலும் நயன்தாரா ஃபிட்னஸ் ஆக இருக்க ரகசியம் இதுதான்…!! நீங்களும் ட்ரை பண்ணுங்க…!!

General News

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களுடன் நடிப்பதால் இவருடைய மார்க்கெட் இப்போது வரை இறங்கியதே கிடையாது. மேலும் தென்னிந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரையும் அவர்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இப்படி இருந்து வந்த நயன்தாராவுக்கு 2023 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. தற்போது அவர்  கைவசம் நயன்தாரா 75, டெஸ்ட், இறைவன், ஜவான் போன்ற படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக ஜவான் திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, ஷாருக்கான், பிரியாமணி, சானியா மல்கோத்ரா மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நயன்தாரா பெருமளவு கி ளா மர் காட்டி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் நயன்தாராவுக்கு மிகப் பெரிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாராவுக்கு வயது அதிகமாகிக் கொண்டே போனாலும் அவருடைய பிட்னஸ் மற்றும் அழகு எப்பொழுதுமே குறைந்ததே கிடையாது. அதற்குக் காரணம் நயன்தாரா எப்பொழுதுமே தனது உடலை சரியாக மெயின்டைன் செய்து வருவது தான்.

தற்போது வரை அவருடைய வெற்றிக்கு அதுதான் காரணம் என பலரும் கூறி வருகின்றனர். அண்மையில் 70 கிலோ எடையிலிருந்த நயன்தாரா தற்போது அ திர டியாக தனது உடலை கு றைத்துக் கொண்டே வருகிறாராம். இப்படி உடம்பை செம்ம ஃபிட்டாக வைத்திருக்க காரணம் வொர்க் அவுட் மற்றும் யோகா இரண்டிலும் தான்  நயன்தாராவின் உடலை குறைக்க மிகவும் உதவுகிறதாம்.

குறிப்பாக யோகா நயன்தாராவின் பிட்னஸுக்கு அதிகம் கை கொடுக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் யோகா செய்கிறாராம். நயன்தாராவின்  டயட் பிளானில் கண்டிப்பாக இளநீர் இருக்குமாம். தினமும் வொர்க் அவுட் முடித்து விட்டு வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவாராம். நயன்தாராவின் காலை உணவில் கண்டிப்பாக ஸ்முத்தி  இருக்குமாம்.

இது உடல் எடையை கு றைக்கவும், எனர்ஜியை கூட்டமும் உதவுகிறது. நயன்தாராவின் மதிய உணவில் இறைச்சி, முட்டை, காய்கறிகள் என அனைத்தும் சமமாக இருக்குமாம்.   கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் த வி ர்த்து வருகிறாராம். நயன்தாரா ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் பழக்கத்தை  வைத்துள்ளார். சரியான தூக்கம் உடல் எடையை கு றைக்க மிகவும் அவசியம். இதை தான் நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *