பிரபல டிவியான விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே சமையல் செய்ய தெரிந்தவர்களையும், சுத்தமாக சமையலை பற்றி எதுவும் தெரியாதவர்களையும் வைத்து நடத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியே. காமெடி கலந்த நிகழ்ச்சியாக இந்த சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து விட்டது. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும், 3வது சீசனில் ஸ்ருத்திகாவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்த 3 சீசன்களில் வந்த கோமாளிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் புகழ்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் வலிமை, எதற்கும் துணிந்தவன், விஜய் சேதுபதி புதிய படம் என அடுத்தடுத்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது புகழ் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார்.
இந்த நிலையில் புகழ் தனது 5 வருட காதலி பென்ஸியா என்பவரை கடந்த 1ம் தேதியன்று தனது பெற்றோர்கள் சம்மதத்துடன திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்களையும் அவரே வெளியிட்டார். ஆனால் புகழ் ஒரு வருடத்திற்கு முன்பே ர கசியமாக பெரியார் படிப்பகத்தில் பென்ஸியாவை பதிவு திருமணம் செய்து கொண்டாராம். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.