ரஜினியுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் 30 வருடங்களாக நடிக்க முடியாமல் இருந்து வரும் 53 வயது நடிகை..!! யார் தெரியுமா…? அதுவும் இப்படி ஒரு படத்திலா…? அந்தப்படம் பிளாக் பஸ்டர் படமாச்சே…!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு தற்போதுள்ள பல நடிகைகள் கூட ஆசைப்படுவார்கள். அது மட்டுமி ல் லாமல் அவர்களுடன் நடித்து விட்டால் தன்னுடைய மார்க்கெட் எகிறிவிடும் எனவும்  நினைப்பார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் உடன் நடிக்க இளம் வயது நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை பலரும் போட்டி போடுவார்கள். அது மட்டுமி ல் லாமல் சூப்பர் ஸ்டார் உடன் நடித்தே ஆக வேண்டும் என பலருக்கு எண்ணம் இருக்கும்.

அந்த வகையில் ஸ்ரீதேவி முதல் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா வரை பலர் ரஜினிகாந்த் உடன் நடித்துள்ளார்கள். ஆனால் ஒரு சில முன்னணி நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைத்தும்  நடிக்க முடியாமல் போய் உள்ளது. அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகை சுகன்யா. நடிகை சுகன்யா கமல், விஜயகாந்த், சரத் குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்து 30 வருடமாக சினிமா வாழ்க்கையில் இருந்து வந்துள்ளார்.

ஆனால் இந்த 30 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் உடன் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க மு டி யாமல் போனது தான் வ ரு த் தம் அளிக்கும் செய்தியாக இருக்கிறது. அந்த வகையில் முத்து திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார் முதன் முதலில் ரஜினிக்கு ஜோடியாக சுகன்யாவைத் தான் நடிக்க வைக்க கேட்டுள்ளார். ஆனால் கே எஸ் ரவிக்குமார் கேட்க சொன்ன ஆள் சுகன்யாவிடம் சென்று கேட்கவி ல் லையாம். அதனால் அவருக்கு அந்த தகவலே தெரியாமல் போனது.

அதன் பிறகு தான் அந்த திரைப்படத்தில் மீனா நடித்தார். மீனா ரோலில் சுகன்யா நடிக்க மு டி யாமல் போனதற்கு மிகவும் வ ரு த் தமான விஷயமாக சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சுகன்யா கூறியுள்ளார். அதே போல் நடிகை ஜெயலலிதா அவர்களும் சுகன்யாவை போல் வாய்ப்பு கிடைத்தும் சூப்பர் ஸ்டார் அவர்களுடன் நடிக்க மு டியாமல் போனது. பில்லா திரைப்படத்தில் ஸ்ரீபிரியா ரோலில் முதன் முதலில் நடிக்க இருந்தது ஜெயலலிதா தான். ஆனால் வாய்ப்பு கிடைத்தும்  நடிக்க முடியாமல் போனது.

அதனைத் தொடர்ந்து ரங்கா படத்தில் கே ஆர் விஜயா ரோலில் ஜெயலலிதாவிற்கு சூப்பர் ஸ்டார் அவர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் ஜெயலலிதா அரசியல் பயிற்சியில் இருந்ததால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *