டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களில் வெகு சிலரே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் கலக்கி வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. இவர் திருமணத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மக்களின் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறார். சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் ஹிட்டான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
1999ம் ஆண்டு கல்லூரி படிக்கும் போதே தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு சன் தொலைக்காட்சியின் இளமை புதுமை நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய ஒரு ரீச் கொடுத்தது. பின் சில இடைவேளைக்கு பிறகு விஜய்யில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் தனது வீட்டில் வராகி அம்மன் பூஜை செய்து வழிபட்ட விடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நெட்டிசன் ஒருவர் அர்ச்சனாவை பார்த்து கமெண்ட் செய்துள்ளார். நிகழ்ச்சிகளுக்கும் ரீல்ஸ் செய்யும் போதெல்லாம் பாரம்பரியமாக புடவை, வளையல், பொட்டு எல்லாம் வைத்துக் கொள்கிறீர்கள். அதேபோல் பூஜை செய்யும் போதும் புடவை அணியலாமே என கமெண்ட் செய்திருக்கிறார்.
அதற்கு கோ ப ப்படாமல் நிதானமாக எடுத்து சொன்ன அர்ச்சனா, சில சமயங்களில் கடவுள் முன், நீங்கள் உங்கள் அடிப்படைகளில் இருக்க முடியும். கடவுளைக் கவர வேண்டிய அவசியமி ல் லை!! நாம் நாமாகவே இருக்கலாம் ! இது எளிமையானது !! மேலும் இது பார்க்கும் கண்களை பொருத்ததே என்று பதிலளித்துள்ளார். அர்ச்சனாவின் இந்த பதில் இணையத்தில் வை ர லாகி வருகிறது.