சூப்பர் சிங்கர் சீசன் 9 என்பது 2022-2023 இந்திய தமிழ் மொழி ரியாலிட்டி தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சியாகும். 19 நவம்பர் 2022 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன். மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே இந்த சீசனுக்கு மீண்டும் தொகுப்பாளர்களாக வந்தனர். நடுவர் குழுவில் நான்கு பிரபல பின்னணி பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், பி. உன்னிகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் உள்ளனர்.
சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் பாடகி சித்ரா, ஆனந்த் வைத்தியநாதன், புஷ்பவனம் கந்தசாமி மற்றும் ஷிவாங்கியின் அம்மா பென்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த வாரம் தொகுப்பாளர்களாக மாகாபா மற்றும் பிரியங்காவிற்கு பதிலாக குரேஷி வந்துள்ளார். எப்பவும் போல எல்லோரையும் கலாய்ப்பது போல் சிறப்பு விருந்தினர் வருகை தந்த கங்கை அமரனை இருவரும் மாறி மாறி கலாய்த்ததால் அவர் கோபமடைந்து தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ.