தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அவரது மனைவி உபசனா கர்ப்பமாக இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 10 வருடங்களாகும் நிலையில் முதல் குழந்தையை எ திர்பார்த்து அவர்களது ஒட்டு மொத்த குடும்பமே மிகுந்த எ திர்பார்ப்பில் காத்து இருந்தனர்.
கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் உபசனா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். உப்பசனாவுக்கு சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ வளைகாப்பு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் வைரலாகிவருகிறது.
இந்த நிலையில், இன்று ராம் சரண் – உப்பாசனா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.