தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என ரசிகர்களால் புகழப்படும் சினேகா முன்னணி நடிகர் அஜித், விஜய், தனுஷ், சிம்பு என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்தார். இதற்கு இடையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதை நிறுத்தி விட்டார்.
அதன் பிறகு இரு குழந்தைகளுக்கு தாயானார். இவருக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து குணச்சித்திர ரோலில் நடித்தும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
இன்று வரை இன்னும் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து பலர் வாய் பிளந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆர்யா சமீபத்திய ஒரு எபிசோடில் கலந்து கொண்டு, உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே சத்தியமா தெரியல என்ற டயலாக்கை கூறி வழிந்துள்ளார். அதற்கு சினேகா, பாடேன் என்ற நயன்தாரா டயலாக்கையும் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Machaaa சாச்சிபுட்ட Machaa.! ?
DanceJodiDanceReloaded | Sat & Sun 8 PM#DanceJodiDance #DJD #djdreloaded #DanceJodiDanceReloaded #ZeeTamil #BabaBhaskar #Sneha #Sangeetha #DanceJodiDanceReloaded #arya @actress_Sneha @arya_offl pic.twitter.com/Y13r0Ig7sG
— Zee Tamil (@ZeeTamil) September 3, 2022