சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி முன்னணி விஜேவாக திகழ்ந்து வருகிறார் பிரியங்கா. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை சோலோ தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியானது 3 சீசன்களை வெற்றி கரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் வனிதா அவர்கள், பிரியங்கா நடத்தி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். இதில் வனிதாவுடன் ஐஸ்வர்யா, சிங்கப்பூர் தீபன், சரத் ஆகியோரும் வந்திருந்தனர்.
அப்போது பாட வந்த வனிதாவை வத்திக்குச்சி வனிதா பாட வராங்க என்று காமெடியாக கலாய்த்திருக்கின்றார் பிரியங்கா. இதனையடுத்து பிரியங்காவை காலால் எட்டி உ தைத்துள்ளார் வனிதா. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பொதுவான ஷோவில் இப்படியா நடந்து கொள்வது எனக்கேட்டு வனிதாவை தி ட்டித் தீர்த்து வருகின்றனர்.