விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோ மா ளி 4 படு கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர். புது புது கோ மா ளிகள், நாம் பார்த்து பழகிய பிரபலங்கள், அதே நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர் என 4வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி இப்போது முடிவுக்கு வர இருக்கிறது.
இந்த சீசனின் வெற்றியாளர் யாராக இருப்பார் என பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். வாரா வாரம் ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்ச்சியில் காட்டும் குழுவினர் இந்த வாரம் சூப்பரான சிறப்பு விருந்தினர்களை அழைத்துள்ளனர். அவர்கள் வேறு யாரும் இ ல் லை கிரிக்கெட் பிரபலங்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் தான்.
இவர்ளில் வெங்கடேஷ் அய்யர் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். அது போல் வருண் சக்கரவர்த்தி தமிழக அணிக்காக விளையாடுகிறார். வருண் சென்னையைச் சேர்ந்தவர். செயிண்ட் பாட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே கிரிக்கெட் விளையாடியவர். அவர் எஸ்ஆர்எம் கல்லூரியில் பட்டம் படித்தார். வெங்கடேஷ் அய்யர் சிஏ இன்டர்மீடியேட் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் எம்பிஏ படிப்பில் சேர்ந்து அதில் இருந்து வி லகி விட்டார்.
இதையடுத்து சவுராஷ்டிரா கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். இவர் ஒரு ஆல் ரவுண்டர். இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர்கள் இருவரும் குக் வித் கோ மா ளி செட்டிற்குள் வந்துள்ளனர். இங்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் , ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார்களா என்பதெல்லாம் இனிதான் தெரியும். இந்த வாரம் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்ட புரொமோ வெளியாகியுள்ளது, இதோ பாருங்கள்,