பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீல் ஜோடி நடிப்பவர்கள் ரியல் ஜோடியாக போறாங்களா…!! யார் அந்த ஜோடி தெரியுமா.?

General News

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் மட்டுமே ஒன்றாக நடித்துவிட்டு பின் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ சீரியலில் நடித்து வரும் கண்ணன், ஐஸ்வர்யா ஜோடியும் ஒருவர்.

பொதுவாக குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்தப் பாசக்கதையை பார்க்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள். இந்த தொடரில் இவர்கள் நால்வரும் தற்போது திருமணம் செய்து விட்டார்கள்.

எல்லோரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துக் கொண்டிருந்த குடும்பம் தற்போது தனித்தனியாக பி ரி ந்து விட்டார்கள். தற்போது இவர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்வது போலவும் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டியான கண்ணனும் அவருக்கு மனைவியாக நடித்து ஐஸ்வர்யாவும் காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்து நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இருவரும் அவ்வப்போது இணைந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செய்து வெளியிடுவார்கள் இதனால் பலரும் இவர்கள் காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக இருக்கும் பு கைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா இப்போது மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் வாழ்க்கையில் நாங்கள் சேர்ந்தே இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று பதிவிட்டிருக்கிறார்கள். இதற்கு விஜய் டிவி புதிய ஜோடியை உருவாக்கியுள்ளது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *