பார்க்க எளிமையாக இருக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? தெரிஞ்சா வாயடைச்சு போயிருவீங்க...!!

பார்க்க எளிமையாக இருக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? தெரிஞ்சா வாயடைச்சு போயிருவீங்க…!!

General News

தளபதி விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தொகுப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதாவது எஸ்.ஏ சந்திரசேகர் இயக்குனராக இருந்ததால் அவரது மகனாக விஜய் சினிமாவிற்குள் நுழைந்த நிலையில் எளிமையாக படங்களில் நடித்து பிரபலம் அடைவதற்கான வாய்ப்புகள் அமைந்தது. அந்த வகையில் விஜய் தனது 10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி விட்டார்.

பிறகு கடந்த 1984ஆம் ஆண்டு எஸ் ஏ சி இயக்கத்தில் வெளியான வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் இதனை அடுத்து ரஜினியின் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட 7 திரைப்படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய் 1992ஆம் ஆண்டு தனது 18 வயதில் ஹீரோவாக அறிமுகமானார். அதாவது எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை வைத்து நாளைய தீர்ப்பு என்ற படத்தினை இயக்கினார்.

இவ்வாறு ஹீரோவாக அறிமுகமான விஜய் இதனை அடுத்து விஷ்ணு, ரசிகன் போன்ற தனது தந்தையின் இயக்கத்தில் உருவான படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் விஜய் பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் நடித்திருந்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. விஜய்யின் முதல் பிளாக் பஸ்டர் ஹிட் அ டி த்த படமாகும். எனவே இதனை அடுத்து தன்னுடைய சொந்த முயற்சியினால் அடுத்தடுத்து பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் தளபதியாக குடியேறினார்.

இந்நிலையில் தற்பொழுது விஜய் தனது 49 வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய்யின் சம்பளம், சொத்து மதிப்பு, கார் கலெக்ஷன் பற்றி தொகுப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்து வரும் நிலையில் தற்போது இவர் ஒரு படத்திற்காக ரூபாய் 150 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

அடுத்ததாக இவர் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்கு ரூபாய் 200 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நேரத்தில் விஜய் அரசியலில் இ றங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதுதான் அவருடைய கடைசி படம் எனவும்  கி சுகி சுக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 145 கோடி இருக்கிறதாம். நடிகர் விஜய்க்கு சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் வீடுகள் உள்ளன. அதில் நீலாங்கரையில் கடற்கரை ஓரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கட்டிய வீடு ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸிலின் வீட்டை மாடலாக வைத்து கட்டப்பட்டதாம்.

ஒரு முறை அமெரிக்கா சென்ற பொழுது டாம் குரூஸ் வீட்டை பார்த்து விஜய் வியந்து போக அதனை போட்டோ எடுத்து வந்து அது போன்று கடற்கரை ஓரம் வீடு கட்டினாராம். இதனை அடுத்து தன்னுடைய அம்மா மற்றும் மனைவி பெயர்களிலும் பல மண்டபங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அனைத்தையும் விஜய் வாடகைக்கு விட்டுள்ளார். பொதுவாக நடிகர் விஜய் மிகவும் எளிமையாக இருக்கக் கூடியவர் என்றாலும் கூட ஏகப்பட்ட சொகுசு கார்கள் வைத்துள்ளார்.

அந்த வகையில் பி எம் டபிள்யூ x5 மற்றும் x6, ஆடி A8 L, ரேஞ்ச் ரோவர் எவோக், போர்டு மஸ்டாங், வால்வோ XC90, மெர்சிடிஸ் பென்ஸ் கிலா, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், இனோவா என இவருடைய கார்களில் வரிசைகள் நீண்டு கொண்டே போகும். இது போக விஜய் ஒரு விளம்பரத்தை மட்டும் நடிப்பதற்காக ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறாராம். இவ்வாறு விஜய்க்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *