தேவர் மகன் படத்தை பார்த்து விட்டு கவுண்டமணி கொடுத்த விமர்சனம்...!! அவர் சொன்னதைக் கேட்டு அ தி ர் ந்து போன சிவாஜி...!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா...?

தேவர் மகன் படத்தை பார்த்து விட்டு கவுண்டமணி கொடுத்த விமர்சனம்…!! அவர் சொன்னதைக் கேட்டு அ தி ர் ந்து போன சிவாஜி…!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா…?

Cinema News

சினிமா துறையில் உலக நாயகன் கமலஹாசன் தனது திரை பயணத்தில் எத்தனையோ படங்களை இயக்கி நடித்து வெற்றி கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு படம் மட்டும் காலம் காலமாக பேசப்பட்டு வருகிறது. அப்படி கமல் நடித்து, கதை, திரைக்கதை எழுதி வெளிவந்த திரைப்படம் தான் தேவர்மகன். இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிவாஜி, வடிவேலு, கௌதமி, ரேவதி, நாசர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றது. சிவாஜி ஒரு படம் நடித்து முடித்து விட்டால் அந்த படத்தை பற்றி எப்போதும் பேசவே மாட்டார்.  அதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது. ஆனால் தேவர் மகன் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு சீனும், காட்சியும் அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததால் தனக்கு தெரிந்தவர்களை தேவர் மகன் படம் பார்க்க சொல்லி இருந்தார். இந்த லிஸ்ட்டில் கவுண்டமணியும் இருந்தார்.

படத்தைப் பார்த்த பிரபலங்கள் வெளியே வந்து சிவாஜியை புகழ்ந்து பேசினார்கள். ஆனால் கவுண்டமணி மட்டும் பின்புறமாக வெளியே சென்று விட்டார். இதை உணர்ந்த சிவாஜி எங்கே கவுண்டமணி, அவர் மட்டும் இந்த படத்தை பற்றி ஒண்ணுமே சொல்லவி ல் லை, எங்கே போனார் அவரை கூட்டிட்டு வாங்க என சொல்ல, உடனே சிவாஜியின் நெருங்கியவர்கள் கவுண்டமணிக்கு போன் பண்ணி சிவாஜி உங்களை வீட்டுக்கு வர சொல்லுகிறார் என சொல்ல, நான் அவரை வந்து பார்த்து என்ன பண்ண போகிறேன் நான் வரவி ல் லை என கூறி விட்டாராம்.

ஆனாலும் சிவாஜியின் நெருங்கியவர்கள் அவரை சிவாஜியின் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். நடிகர் திலகம் சிவாஜி ஏன் தேவர் மகன் படத்தை பார்த்து விட்டு ஒண்ணுமே சொல்லவி ல் லை, எங்கே போனாய் என கேட்க இந்த படத்தைப் பற்றி நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் ரொம்ப வ ரு த் தப்படுவீங்க என சிவாஜியிடம் கவுண்டமணி கூறினார்.

அதற்கு சிவாஜி, நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு என கோ ப மாக கூறினாராம். உடனே கவுண்டமணி தேவர்மகன் படத்தில் நீங்கள் நடந்தா ஊரே நடக்குது. நீங்க படுத்தா ஊரே படுக்குது அந்த அளவுக்கு  பில்டப் எல்லாம் கொடுக்கிறாங்க.. கடைசில ஒரு சின்ன பொண்ணு நெஞ்சில் மிதிச்சு நீங்க செத்து போறீங்க.. இதெல்லாம் ஒரு படமா என கூறி சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாராம்..

இதைக் கேட்ட சிவாஜி அ தி ர் ந்து போனாராம். சரி இவன் இந்த கோணத்தில் தான் இந்த படத்தை பார்த்து இருக்கிறான் எனக் கூறி அனைவரிடமும் சொன்னாராம். படத்தை  பல பிரபலங்கள் பார்த்து இருந்தாலும் கவுண்டமணி மட்டும் வேறு ஒரு கோணத்தில் இந்த படத்தை பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *