சினிமாவில் 80, 90களில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவி ல் லை. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. 90 கால கட்டத்தில் நகைச்சுவை மற்றும் க வ ர்ச் சி வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷர்மிலி. 13 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வந்தவர் ஷர்மிலி. இவருக்கு பின்நாட்களில் பட வாய்ப்புகள் கு றைய தொடங்கியதும், திரையுலகையை விட்டு வெளியேறினார்.
பல வருடங்களுக்கு பிறகு தற்போது பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர், நான் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது உண்மை தான். அதனால் நான் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன். இளம் வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டிருந்தால் எப்படி வளர்த்திருப்பேன் என தெரியாது.
ஆனால் இப்போது நான் கர்ப்பமாக இருப்பதால் என்னால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனது கணவர் அரவிந்த் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார். எனது வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தா ம த மாகத் தான் கிடைத்தது. அதேபோல குழந்தையும் 40 வயதில் தான் கிடைத்துள்ளது என பேசியுள்ளார்.
நான் சினிமாவில் இல்லை என்றாலும், சீரியலுக்காக கதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆரம்பத்தில் திருமணம் செய்யாமல் ஜாலியாக இருக்கலாம் சம்பாதிக்கலாம், சாப்பிடலாம் என்று நினைத்து இருந்தேன். 40 வயதுக்கு மேல் தான் எனக்கு துணை வேண்டும் என்ற எண்ணம் புரிய வந்தது. நமக்கு கிடைக்கும் வாழ்க்கையை நாம் தான் நன்றாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாங்கள் இருவரும் எங்களின் பெயரைச் சொல்லி கூட இன்று வரை அழைத்ததி ல் லை. அம்மு என்று தான் அழைத்து பேசிக் கொள்வோம். எனது கணவரை 20 வருடத்திற்கு முன்பு அவரை நான் பார்த்திருக்கலாம். ஆனால் அன்று எனக்கு வாழ்க்கை அமையவி ல் லை. இன்று நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என பேசினார்.