மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சியான இது இதுவரை 3 சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் விசித்ரா, மைம் கோபி, ஷெரின், சிருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியன், காளையன், கிஷோர் ஆகியோர் உடன் கடந்த மூன்று சீசன்களாக கோ மா ளியாக கலக்கிய சிவாங்கியும் இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி சமைத்து வருகிறார்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இ று திக் கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். தற்போது சிவாங்கி, கிரண், சிருஷ்டி, மைம் கோபி, விசித்ரா ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த 4வது சீசனில் யார் வெற்றிப்பெறுவார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர். குக் வித் கோ மா ளி 4வது சீசனின் முதல் Finalist ஆக விசித்ரா தேர்வானார், அவரை தொடர்ந்து சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவி ல் லை.