தமிழ் சினிமாவில் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1981ல் வெளியான படம் ராணுவ வீரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தில் நடிகையாக அறிமுகமாகினார் நளினி. அதன் பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார். அதன் பின் நடிகர் ராமராஜனுடன் ஜோடியாக நடித்த நளினி அவரைக் காதலித்து 1987ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வே று பாடு ஏற்பட்டு வி வாகர த் து பெற்று பி ரி ந்த னர். இருந்தாலும் கூட அருணா, அருண் என்ற இரு பிள்ளை இருக்கும் நளினி, ராமராஜனுடன் இன்னும் நட்புடன் வாழ்ந்தும் பிள்ளைகளை இருவரும் சேர்ந்து க வ னித்தும் வருகிறார்கள். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியொன்றில் தன் வாழ்க்கையில் நடந்த பல விசயங்களை பகிர்ந்துள்ளார் நளினி.
அதில், தன்னுடைய அப்பா நடன ஆசிரியராக இருந்ததால் சினிமாவை பற்றி தெரிந்ததால் என்னை நடிகையாக கூடாது என்று கூறினார். நான் செல்லப் பெண், நான் க ஷ் டப்பட கூடாது, எங்க அம்மாவுடைய ஆ சையால் தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். என் அப்பாவும் என் பெரிய அண்ணனும் அதனால் கோ வி த்துக் கொண்டு வீட்டை விட்டு போ ய் ட் டாங்க என்று கூறியுள்ளார்.