பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து பெரிய ஹிட் ஆன படம் முந்தானை முடிச்சு. ஏ வி எம் தயாரிப்பில் பாக்யராஜ் அவர்களே இயக்கி இருந்த படம் இது. இந்தப் படம் 1983ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆனது.
ஒரு கிராமத்திற்கு வாத்தியாராக கைக்குழந்தையுடன் வரும் பாக்யராஜ், அதே கிராமத்தில் குறும்புக்கார பெண்ணாக இருக்கும் ஊர்வசி, இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் விஷயங்கள் தான் படத்தின் கதையாக இருக்கும்.
இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கோபி செட்டிப்பாளையம் அருகில் இருக்கும் ஓலப்பாளையம் என்ற இடத்தில் வீடு ஒன்று புதிதாக கட்டப்பட்டதாம்.
படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் அந்த வீட்டை அந்த ஊரின் பள்ளிக்கு கொடுத்து விட்டார்களாம். இந்த தகவலை தற்போது ஏ வி எம் நிறுவனத்தின் அருணா குகன் தெரிவித்து இருக்கிறார்.
#AVMTrivia | The story behind Bhagyaraj sir’s house in Mundhanai Mudichu.
A major portion of this movie was shot in Olapalayam, near Gobichettipalayam. The house near the school which is shown in the movie as Bhagyaraj sir’s house was newly built by us. After the shooting, we… pic.twitter.com/ob89K0zvMF
— Aruna Guhan (@arunaguhan_) July 10, 2023