பொதுவாக சினிமாவில் அழகாக இருக்கும் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் இருப்பவர் நீது சந்திரா என்பவர். இவர் தென் இந்திய சினிமாவையும் தாண்டி ஹிந்தியிலும் அதிக அளவில் படங்கள் நடித்தவர். இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான யாவரும் நலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவரின் முதல் படமே இவருக்கு வெற்றியைக் கொடுத்ததால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதி பகவான், விஷால் நடிப்பில் வெளிவந்த தீ ராத விளையாட்டுப் பிள்ளை போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.
பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கையில் பணமும் இல்லை. மிகுந்த க ஷ் டத்தில் இருந்துள்ளார். அச்சமயத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் பெரிய படங்கள் நடித்துள்ளேன். பதிமூன்று விருதுகளை வாங்கியுள்ளேன். ஆனால் இன்று என்று பட வாய்ப்புகள் எதுவும் இ ல் லை என மிகுந்த மன வே த னையுடன் கூறியுள்ளார்.
இப்படி இருக்கும் ஒரு நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் மாதம் 25 லட்சம் சம்பளம் தருவதாகவும், அவர் தரும் சம்பளத்திற்கு தனக்கு மனைவியாக இருக்கும் படியும் கூறியுள்ளார். ஒரு பெண் கஷ்டத்தில் இருக்கும் போது சில ஆண்கள் பெண்களிடம் எப்படி வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாம் அப்படித்தானே என்று வ ரு த் தத்துடன் தெரிவித்துள்ளார்.