விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோ மா ளி சீசன் 4 தற்போது நிறைவு பகுதியை எட்டியுள்ளது. டிக்கெட் டு பினாலே சுற்றில் இருந்து முதல் பைனலிஸ்ட்டாக விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற செமி பைனல் சுற்றில் இருந்து சிவாங்கி, கிரண், மைம் கோபி, ஸ்ருஷ்டி ஆகியோர் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவரை ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வைல்ட் கார்டு சுற்றில் இருந்து ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் தான் கடைசி பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஏற்கனவே வெளிவந்த செய்தியின் படி 6வது பைனலிஸ்ட்டாக ஆண்ட்ரியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியான நிலையில், அதை தான் ரசிகர்கள் அனைவரும் கூட எ தி ர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அதன் படியே, இந்த வாரம் நடைபெற்ற வைல்ட் கார்டு சுற்றில் இருந்து 6வது பைனலிஸ்ட்டாக ஆண்ட்ரியன் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எலிமினேட் ஆகி வெளியே சென்று விட்ட பிறகு வைல்ட் கார்ட் சுற்றில் 6வது பைனலிஸ்ட்டான மகிழ்ச்சியில் சற்று கண் க ல ங்கி தனது உ ணர்ச்சிகளை ஆண்ட்ரியன் வெளிப்படுத்தினார். மேலும் அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.