குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். சமையல் மற்றும் காமெடி க லா ட்டா என இவை இரண்டும் கலந்து இருக்கும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சிரிக்கத் தெரியாதவர்கள் கூட சிரித்து விடுவார்கள்.
அந்த அளவிற்கு கலகலப்பான இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் மிகவும் வித்தியாசமான உணவுகளை சமைத்து அதிக பாராட்டுக்களை பெற்றவர் அஸ்வின்.
இவர் அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய பாடல்கள்மற்றும் சில படங்கள் நடித்து வருகிறார். இப்போது என்னவென்றால் நடிகர் அஸ்வினுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால் அவர் யார் என்ற விவரம் எதுவும் இதுவரை வெளியாகவி ல் லை.