பொதுவாக சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக முதலில் திரையுலகில் அறிமுகமாகி பின்னர், ஹீரோயினாக வலம் வரும் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக இருப்பவர் அஞ்சு. தன் தந்தையை விட வயதில் மூத்த நடிகரை திருமணம் செய்தது ஏன் என்றும், பின்னர் அவரை பிரிய என்ன காரணம் என்பதையும் தற்போது முதல் முறையாக, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
உதிரி பூக்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஞ்சு. இவர் பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மிகச் சிறிய வயதிலேயே ஹீரோயினாக மாறியவர். தமிழ் மட்டுமல்லாது, பல மலையாள திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டில் ருக்மிணி என்கிற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருதை வென்றார்.
இவர் மிகச் சிறிய வயதிலேயே தன்னுடைய தந்தையை விட, வயதில் மூத்த வில்லன் நடிகரும், கன்னட திரையுலகின் இயக்குனருமான டைகர் பிரபாகரை 1995 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரே வருடத்தில் கணவரைப் பிரிந்தார். 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது, தன்னுடைய பெற்றோரிடமே வந்து சேர்ந்த அஞ்சு தற்போது வரை, அவருடைய பெற்றோர் பாதுகாப்பில் தான் உள்ளார்.
இவருக்கு அர்ஜுன் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அஞ்சு தந்தையை விட வயதில் மூத்தவரை திருமணம் செய்தது ஏன் என்பது குறித்தும் அவரைப் பி ரி வதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் பேசி பலரையும் அ தி ர் ச் சியடைய செய்துள்ளார்.
டைகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்ட போது தனக்கு 17 வயது தான் என்றும், அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாகவே அவரை திருமணம் செய்து கொண்டேன். அப்போது அவருக்கு தன்னை விட, வயதில் மூத்த மூன்று பிள்ளைகள் இருப்பது தனக்கு தெரியாது என்றும், அவருக்கு நான் 4 ஆவது மனைவி என தெரிய வந்ததவுடன் தான் அவரை விட்டு பி ரி ந் து அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன்.
அவரை விட்டு விட்டு நான் வரும் போது, நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். பின்னர் சில வாரம் கழித்து அவரே என்னை தேடி வந்து வாழலாம் அழைத்தார். ஆனால் என்னால் வர மு டி யாது என அவருடன் செல்ல ம று த்து விட்டேன். பின்னர் தன்னுடைய மகனுக்கு 2 வயது இருக்கும் போது, அவர் இ ற ந் து விட்டதாக செய்தி மட்டும் வந்தது என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.