குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதில் அவர் ஏற்றிருந்த சோலையம்மா கதாபாத்திரம் ரசிகர்களை கவர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.
உலக நாயகனான கமலுடன் முதன் முதலாக மீனா அவ்வை சண்முகி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு, கொடுத்தனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மீனா அவ்வை சண்முகி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை குறித்து பேசியுள்ளார். கமல் படம் என்றாலே மு த்தக் கா ட்சிகள் இருக்கும். ஆனால் அந்த சமயத்தில் அதைப் பற்றி யோசிக்காமல் படத்திற்கு ஓ கே சொல்லி விட்டேன்.
அப்போது ஒரு நாள் கே எஸ் ரவிக்குமார், அடுத்து கமலுடன் முத்தக் காட்சி எடுக்கப் போவதாக என்னிடம் சொன்னார். இதைக் கேட்ட உடனே எனக்கு ப ய ம் வந்து விட்டது. அந்த சமயத்தில் கேரவன் சென்று அம்மாவிடம் இது போன்ற காட்சியில் நடிக்க பிடிக்கவி ல் லை என்று சொல்லி கண் க ல ங்கினேன்.
அதுக்கு அப்புறம் இந்தக் காட்சி எடுக்கும் போது கமல் ஹாசன் முத்தம் கொடுப்பது போல் பக்கம் வந்து ‘இந்த தடவை வே ண்டாமே” என்று சொல்லி முத்தம் கொடுக்காமல் சென்று விட்டார். ஒருவேளை கிஸ் சீன் எடுத்திருந்தால் அதற்கு முன்னதாகவே இயக்குநரிடம் நானே முடியாது என்று சொல்ல நினைத்திருந்தேன்” என்று மீனா கூறினார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வை ர லாகி வருகிறது.