தமிழ் சினிமாவில் அதிகளவான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகைகளில் ஒருவர் தான் லட்சுமி மேனன். மலையாள நடிகையாக 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேன். கும்கி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனனுக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் பிஸியான நடிகையாக மாறினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து இரண்டாவது படம் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் லட்சுமி மேனன் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். பின்னர் குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்தார்.
மேலும் றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. பட வாய்ப்புகள் சரியாக அமையா ததா ல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பு கைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் சிப்பாய் என்ற படத்திலும், சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 27 வயதாகும் நடிகை லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி வை ர லா கி வருகின்றது.
அந்த வகையில் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை பிரபல நடிகர் என்று கூறப்படுகின்றது. முன்பதாக நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இவ்வாறு கிசுகிசுக்கப்பட்ட விஷாலைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். எது எவ்வாறாயினும் ரசிகர்கள் இப்போதிருந்தே லட்சுமி மேனனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.