தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படம் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படம் என்றே சொல்லலாம்.
பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முக்கிய நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் என இருவருமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து ரசிகர்கள் அனைவரின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அவர் நடித்துள்ள நந்தினி என்கிற கதாபாத்திரத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எ தி ர்பா ர்த்து இருக்கின்றனர்.
மேலும் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்திருப்பது வேறு யாருமல்ல, முன்னணி சீரியல் நடிகையும், பிரபல டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தானாம். அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram