போனில் காதல் ப்ரொபோஸ்...!! சினிமா கதையாசிரியர்களையே மிஞ்சிய பொன்வண்ணன்...! சரண்யாவின் சுவாரஸ்ய காதல் கதை...!!!

போனில் காதல் ப்ரொபோஸ்…!! சினிமா கதையாசிரியர்களையே மிஞ்சிய பொன்வண்ணன்…! சரண்யாவின் சுவாரஸ்ய காதல் கதை…!!!

General News videos

தமிழ் சினிமாவில் 90களின் கால கட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் கமலுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் நடித்த முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முக்கிய கேரக்டர்களிலும் வந்து அசத்தினார். தற்போது  ஹீரோக்களுக்கு அம்மா என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவராகத்தான் இருக்கும்.

இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதினை பெற்றுள்ளார். எம்டன் மகன், வேலையி ல் லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒரு கல் ஒரு கண்ணாடி, கொடி போன்ற பல படங்களில் அம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் குடி கொண்டுள்ளார். இதற்கிடையில் இவர் 1995இல் இவருடன் பணிபுரிந்த பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தி என இரு மகள்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பொன்வண்ணன் அவர்கள் சரண்யாவுக்கு ப்ரோபோசல் செய்த கதையை தற்போதைய பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். அதில் பொன்வண்ணன் எனக்கு போன் செய்து உங்களுடைய கால்ஷீட் வேணும் எனக் கேட்டார். நானும் படத்திற்கு என நினைத்து எத்தனை நாட்கள் வேண்டும் என திரும்ப கேட்டேன். அதற்கு அவர் கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு வேண்டும் எனக் கூறினார்.

அதன் பிறகு எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு புரிந்து விட்டது. தொடர்ந்து பேசியவர் அதற்காக நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். உங்களுடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என கேட்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். இ ல் லை என்றால் எந்த பி ர  ச் ச னையும் இ ல் லை எனக் கூறினார். நான் யோசிக்கணும் எனக் கூறிவிட்டு போனை வைத்தேன். அதன் பிறகு நானும் ஓ கே சொல்ல எங்களுடைய திருமணம் நடைபெற்றது எனக் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *