ரஜினி, விஜய், அஜித்துக்காக கூட செய்யாத இந்த விஷயத்தை 57 வயது நடிகருக்காக மாற்றப் போகும் நயன்தாரா…!! என்ன இப்படி பண்ணிட்டார்…!!

Cinema News

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு கடந்தாண்டு விக்னேஷ் சிவன் உடன் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய திரையுலகில் மட்டுமே கோடி கட்டி பரந்த நயன்தாரா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாகவும் மா றியுள்ளார். தற்போது பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் இந்தியில் அவர் நடித்துள்ள முதல் திரைப்படம் ஜவான். ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார்.  இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்.

இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெறவுள்ளது. ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். இப்படமும் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார் அனி. ஜவான் படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. அந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படங்களின் ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா தற்போது ஜவான் படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய ஓ கே கூறியுள்ளாராம். ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ள மா ட்டார். இதை அவர் தன்னுடைய கொள்கையாக வைத்துள்ளார். ஆனால் சமீப காலமாக தனது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான புரமோஷனில் மட்டும் தலைகாட்டி வருகிறார் நயன்.

ஆனால், தற்போது தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானுக்காக தனது கொள்கையை நயன் விட்டுக் கொடுக்க போகிறார் என கூறப்படுகிறது. இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும் கூட, கோலிவுட் பிரபலங்கள் கோ ப ம டைந்துள்ளனர். கோலிவுட் பிரபலங்கள் பலர் கெஞ்சி கேட்டும் புரமோஷனுக்கு வர ம று த்த நயன்தாரா, தற்போது பாலிவுட் போனதும் தனது பாலிசியை மாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *