விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ், பிக் பாஸ் முடிந்தவுடன் குக் வித் கோ மா ளி என மாற்றி மாற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். குக் வித் கோ மா ளி 4வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முடிந்து விட்டது, ஆனால் பிக்பாஸ் இன்னும் தொடங்கப்படவி ல் லை. தற்போது அதாவது நேற்று ஆகஸ்ட் 18 மாலை பிக்பாஸ் 7வது சீசன் புரொமோ வெளியாகி இருந்தது.
அந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் கடல் நடுவே இருக்கும் பாலத்தில் நிற்பது போல் புரொமோ அமைந்துள்ளது. இந்த புரொமோ வெளியானதும் இது ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் வாடை அ டிக்கிறதே என சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தீவில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது போல இந்த ஏழாவது சீசனிலும் போட்டியாளர்களை தனித் தீவில் தங்க வைப்பதற்காகத் தான் இப்படி ஒரு ஏற்பாடா? என்கின்றனர் சிலர்.