பிரபல தமிழ் நடிகரான கவின் தன்னுடைய நீண்ட நாள் தோழியான மோனிகாவை இன்று திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் கவினும் விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக அடுத்தடுத்து சில சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சரவணன் மீனாட்சியில் நடித்தபோதே கவினுக்கு ஏராளமான இளம்பெண்கள் ரசிகர்களாக மாறினார்கள். சீரியலில் பிரபலமாகியப் பின் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்று சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாகியிருக்கிறார். அதன் பின் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் நடித்த கவின் படம் எ தி ர் பார்த்த அளவில் வெற்றிப் பெ றாத காரணத்தால் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து லிப்ட் படத்தில் நடித்தார். தற்போது வெளியான டாடா படத்தின் வெற்றி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில், பள்ளியில் பணியாற்றி வரும் தனது காதலியான மோனிகாவுடன் ஆகஸ்ட் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தது. அதன்படி, இன்று காலை கவின் – மோனிகா திருமணம் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. மேலும் கூடிய சீக்கரமே கவின் மற்ற திருமண பு கைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என எ தி ர்பார்க்கப்படுகிறது.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பு கைப்படம் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது. இந்த பு கைப்படத்தில் நடிகர் புகழும் இருக்கிறார். நடிகர் கவினுக்கு கல்யாணம் ஆனது தெரிய வந்த நிலையில், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கவினுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பு கைப்படம்..