நான் பிறந்த 9 நாட்களில் நானே நின்றேன்… நடந்தேன்…” மேடையில் வீடியோ வை ர ல் ஆன நிலையில் விளக்கம் அளித்த சிறுவன்….!!

General News videos

சமூக வலை த ளங்களில் தினந்தோறும் புதுப்புது ச ர் ச் சை களும், சில நகைச்சுவையான செய்திகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அது போல தான் சில நாட்களுக்கு முன் ஒரு திருச்சபை மேடை ஒன்றில் கூறியது ஒரு த வ றான கருத்தாக தற்போது பேசும் பொருளாகவும் மாறியுள்ளது. அந்த சிறுவனின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் மற்றும் அந்த சிறுவனை கிண்டல் செய்யும் வகையிலும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் அச்சிறுவன் கூறுகையில் “நான் என்னுடைய தாயின் கருவறைக்குள் இருந்த போது என்னுடைய தாயிடம் உங்களுக்கு கருவறையில் ஆண் ஒரு குழந்தை உள்ளது என்றும், ஆனால் அந்த குழந்தை பிறக்க வாய்ப்பி ல் லை  என்றும் மருத்துவர்கள் எனது அம்மாவிடம் கூறியிருந்தார்கள். உங்களுக்கு குழந்தை பிறந்தால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள். நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் அந்த குழந்தையை கொ ன் று விட வேண்டும் என்று கூறினார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த நேரத்தில் என்னுடைய அம்மாவும், அப்பாவும் கைகளை கோர்த்து ஆண்டவரிடம் வேண்டினார்கள். நீங்க தருவேன்னு சொன்னீங்க அதேபோல நீங்கள் அந்த குழந்தையை தந்தால் நான் என் குழந்தையை உழியத்திற்கு கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். அது போலவே தேவன் தந்தார். ஆப்ரேஷன் தியேட்டர் போன உடனே நீங்கள் குழந்தையை பெற்று கொள்ளலாம். உங்களுக்கு எந்த ஒரு பி ர ச் ச னையும் இ ல் லை என்று சொன்னார்கள்” என்று கூறினான்.

இது வரை அந்த சிறுவன் கூறியது ஏற்று கொள்வது போல தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு கூறியது தான் அனைவரையும் திக்கு முக்கு ஆக்கியது. அதாவது “ நான் பிறக்கும் போதே 5 கிலோ எடையுடன் பிறந்ததாக என் அம்மா சொன்னார். நான் பிறக்கவே மாட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் 5 கிலோ எடை உடன் பிறந்தேன். பிறந்த 9 நாட்களில் நின்ற ஒரே  குழந்தை நான் தான் என்று கூறினார்.

என்னை தேவனுக்கு ஒப்பு கொடுத்ததால் 9 நாட்களில் நானே நிற்பேன், நானே நடப்பேன், நானே கழிவறைக்கு செல்வேன், நானே உட்காருவேன், நானே உறங்குவேன், நானே நாற்காலியில்  உட்காருவேன் அந்த அளவிற்கு தேவன் கிருபை செய்தார் என்றும் கூறினார். இதனை சமூக வலைதளங்களில் தீ யா ய் பரவி எண்ணி நகையாடி வந்தனர். அந்த சிறுவன் கூறுகையில் “ சில நாட்களுக்கு முன்பாக நான் ஒரு இடத்தில் செய்தி சொல்ல சென்று இருந்தேன்.

அந்த இடத்தில் என்னுடைய செய்தியை கூறும் போது நான் என்னுடைய பிறப்பு பற்றி பகிர்ந்து கொண்டேன். அந்த நேரத்தில் நான் 9 நாளில் நடந்தேன் என்று  த வ றா க கூறினேன். மாதம் என்பதற்கு பதிலாகத்தான் 9 நாட்கள் என்று கூறி விட்டேன். அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்” என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இந்த இரு வீடியோகளும் தான் தற்போது இணையத்தில் வை ர லா க பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *