2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த கோப்பையை நடிகை மீனா பாரீசில் அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்த பு கைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன் என்று அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த பு கைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்டமான கோப்பையுடன் மீனா இருக்கும் இந்த பு கைப்படம் தற்போது வை ர ல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள இருக்கும் இந்த போட்டி இந்திய மண்ணில் நடைபெற உள்ளதால் இந்தியா உலகக் கோப்பை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
View this post on Instagram