அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.
அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதே போல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் ஹீரோவாக மட்டுமி ல் லா மல் வி ல் லனாகவும் மி ர ட்டிக் கொண்டு வருகிறார். மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். சமீபத்தில் விஜயகுமார், விஜயகுமாரின் மகன் அருண் விஜய், விஜயகுமாரின் பேரன் ஆகிய மூன்று பேருமே சேர்ந்து ஓ மை டாக் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார்.
விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கன்னுவுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார்.
அருண் விஜய்யின் அக்கா கவிதா, சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். கவிதாவின் முதல் பொண்ணு தான் ஹாசினி. இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. அதில் விஜயகுமார் உடைய மகன்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். வனிதா மட்டும் இதில் கலந்து கொள்ளவி ல் லை. தற்போது இந்த பு கைப்படம் வெளியானதை தொடந்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.