நான் வந்துட்டேனு சொல்லு… தன் இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தி ஸ்டைலாக நடந்து வந்து தனது முதல் இன்ஸ்டா வீடியோ வெளியிட்ட நயன்தாரா…!!!

General News videos

இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்துள்ள நயன்தாரா தனது மகன்களுடன் வெளியிட்ட முதல் வீடியோ தற்போது வை ர லாகி வருகிறது. உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமி ல் லா மல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்லச் செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எ தி ர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த கனக்ட் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் , ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

இப்படி ஒரு நிலையில் திருமணமாகி நான்கு மாதங்களுக்கு பிறகு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சி கொடுத்து இருந்தார்கள். இது பற்றி நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் தங்களுடைய ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும், மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆனால், தற்போது வரை தங்கள் உயிர் உலகத்தின் முகத்தை காட்டாமல் இருந்து வருகின்றனர். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது இரண்டு மகன்களின் பு கைப்படத்தை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அதிலும் குழந்தைகளின் முகத்தை காட்டவி ல் லை.

நயன்தாரா இன்ஸ்டாகிராம் வலைத்தளத்திலும்  இல் லை என்பதால் விக்னேஷ் சிவன் தான் பு கைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி இருக்கிறார்.  அதில் முதல் பதிவாக தனது இரண்டு மகன்களான உயிர் உலக்கை கையில் ஏந்தி நடந்து வரும் படியான வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்று கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *