தற்போது கோபிநாத்தை தெரியாதவர்கள் யாருமே இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார் கோபிநாத். மக்கள் யார் பக்கம் என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் கோபிநாத். அதே போல் சிகரம் தொட்ட மனிதர்கள், என் தேசம் என் மக்கள், நடந்தது என்ன உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இத்தனை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் கோபிநாத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்தது என்னவோ நீயா நானா நிகழ்ச்சி தான். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக விளங்கி வரும் கோபிநாத்திற்கு, துர்கா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் பிள்ளை ஒருவர் இருக்கிறார். இவரை ரசிகர்கள் சில நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இவரது மனைவியை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இவரின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரையும் அழகிய ஜோடி எனக் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…