விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியவர் தான் மோனிஷா. இது தவிர இவர் யூடியூப் சேனலான பிளாக் ஷீப்பிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தவர். இருப்பினும் இவருக்கென்று நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அது குக் வித் கோ மா ளி சீசன் 4 நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான கெட்டப்புக்கள் போட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். இதில் இவர் கோவை சரளா போல பிச்சைக்காரி போன்ற கெட்டப் பெரிய ஹிட் ஆனது. மேலும் மோனிஷா சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவரது தங்கை ரோலில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் மோனிஷா தற்போது ஒரு புது கார் ஒன்றினை வாங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு அவரது குடும்பம் இரண்டு முறை செகண்ட் ஹாண்ட் கார் வாங்கி அதிகம் க ஷ் ட ப்பட்டதாகவும், அதனால் தற்போது புது கார் வாங்கி இருப்பது கனவு நிறைவேறி இருப்பது போல இ ருக்கிறது என மோனிஷா கூறி இருக்கிறார். Hyundai Exter ரக காரை தான் மோனிஷா வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 12 லட்சம் ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram