முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் பொது மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த உணவு திட்டத்திற்கு பெயரை மாற்றி அமைக்குமாறு எழுதிய அந்த கடிதத்தில் அந்த சிறுவன் எழுதியுள்ளார். அது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அளிக்கபட்டுவருகிறது. “நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இ ல் லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.
பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டும ல் ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப் போவதாக” கடந்த ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். அதன் படி இந்த திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சில மாநகராட்சிகள், நகராட்சிகள், சில தொலைதூரக் கிராமங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக இந்தத் திட்டத்தில் உணவு அளிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 17 லட்சம் மாணவர்கள் காலை உணவை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டமே, காலை உணவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த உணவு திட்டத்திற்கு பெயரை மாற்றி அமைக்குமாறு அந்த கடிதத்தில் அந்த சிறுவன் எழுதியுள்ளார். அது தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அந்த கடிதத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்ட வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு நான்காம் வகுப்பு மாணவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.