பிறந்தவுடன் அரவிந்த்சாமியை தத்து கொடுத்து விட்டேன்…!! காரணம் இதுதான்..!! மனம் திறந்த அவர் தந்தை மெட்டி ஒலி நடிகர் டெல்லி குமார்…!!

General News

சின்னத்திரையில் ஒரு சிலருடைய முகம் தான் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவிற்கு அதிகமான ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது. அந்த வகையில் ஒருவர் தான் டெல்லி குமார். இவர் ஆனந்தம், மெட்டிஒலி, தலையணை பூக்கள், பாண்டவர் இல்லம் என பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். அதுவும் மெட்டிஒலி சீரியலில் அப்பா கேரக்டரில் இவர் நடித்து பலருடைய அனுதாபங்களையும், பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

பிரபல நடிகர் டெல்லி குமார் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீ ரியல்களில் நடித்து பிரபலமானவர். அதிலும்  குறிப்பாக மெட்டி ஒலி சீ ரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போ மட்டுமில்லாமல் இப்போதும் இவருக்கு வயது மட்டும்தான் அதிகரித்து இருக்கிறதே தவிர அவருடைய அழகும் நடிப்பும் எப்போதும் பலருக்கும் பேவரைட் தான். பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் உண்மையான தந்தை இவர் தான். 90 கால கட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தை ஓரங்கட்டும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் அரவிந்த்சாமி. தற்போது வி ல் ல னாகவும் நடித்து வருகிறார்.

எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தால் அவர் அரவிந்த்சாமி போல் இருக்க வேண்டும் என்று 90ஸ் இளம்பெண்கள் பலரும் வாய் விட்டு கேட்கும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் அரவிந்த்சாமி. பல வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் அரவிந்த்சாமி கடந்த 1994 ஆம் ஆண்டு காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆம் ஆண்டு  மனைவியைப் பி ரி ந்தார்.

மனைவியைப் பி ரி ந்தாலும் தன்னுடைய குழந்தைகளை தன்னுடைய பாதுகாப்பிலேயே வளர்த்து வருகிறார். அரவிந்த் சாமியின் தந்தை சீரியல் நடிகர் டெல்லி குமார் என்று பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் டெல்லி குமார் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அரவிந்த்சாமி என்னுடைய மகன்தான். அவன் பிறந்த உடனே என்னுடைய மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்து விட்டோம். அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் அதிகமாக என்னிடம் ஒட்டிக் கொண்டது கிடையாது.

பங்க்ஷன் போன்ற முக்கியமான நேரங்களில் வருவார். ஏதாவது தேவை என்றால் பேசிக்கொண்டு கிளம்பி விடுவார். அவரை அளவுக்கு அதிகமான பாசத்தோடு என்னுடைய சகோதரி வளர்த்து விட்டதால் அவர்களை தான் அம்மா அப்பா என்று மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அரவிந்த்சாமி என்னுடைய மகன் என்று வரும் தகவல் உண்மைதான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இ ல் லை என பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *