பாரதிராஜாவின் படத்தில் நடித்து அந்த படத்தோடு சினிமாவில் இருந்து வி ல கிய நடிகர் ஒருவர் தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரியாக காத்திருப்பதாக சமீபத்தில் அளித்து பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நாம் மீண்டும் மீண்டும் கேட்டாலும் எப்போதுமே சலிக்காத சிறந்த பாடல்கள் உள்ளன. அதிலும் இளையராஜா-எஸ்.பி.பி இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அப்படி ரசிகர்கள் இப்போதும் கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று தான் சங்கீத ஜாலி முல்லை பாடல்.
பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’காதல் ஓவியம்’ திரைப்படம் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியானது. கண்ணன் மற்றும் ராதா ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் எ திர் பார்த்த வெற்றியை தரவி ல் லை. குறிப்பாக கண்ணன் இந்த படத்தில் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியாக மிகவும் சிறப்பாக நடித்திருந்தாலும், அவருக்கு அந்த படத்தை அடுத்து வேறு வாய்ப்புகள் கிடைக்கவி ல் லை.
இதனை அடுத்து அவர் சினிமாவில் இருந்து வி லகி அமெரிக்கா சென்ற நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை வந்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ’காதல் ஓவியம்’ படத்தில் கண் தெரியாத கேரக்டரில் நான் க ஷ் ட ப்பட்டு நடித்தேன். கண்விழி பி து ங்கியபடி நான் நடித்தது பார்வையாளர்களுக்கு அ ச் ச த்தை ஏற்படுத்தியதால் தான் அந்த படம் தோ ல் வி அடைந்தது என்று கூறினார்.
தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 60 வயதான கண்ணனுக்கு தற்போது உள்ள இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கண்ணனை நீண்ட வருடங்களுக்கு பிறகு கண்ட ரசிகர்கள் இவரா படத்தில் வந்தவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.