கடந்த ஞாயிற்று்கிழமை அன்று கோலாகலமாக துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது 4 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.
கடந்த ஒரு நாளைக்கு முன்பு கதை சொல்லும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர் யாராவது ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் திரையில் கிசுகிசுக்களை வைத்து அவர்களை பற்றி கதை சொல்ல வேண்டும் என்பதே அந்த டாஸ்க். இப்படி ஒரு நிலையில் நேற்றைய எபிசோடில் வழக்கம் போல போட்டியாளர்கள் மத்தியில் ஒரு சில வி வா தங்கள் சென்று கொண்டு இருந்தது. அதோடு பவா செல்லத்துரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களை அமர வைத்து கதை ஒன்றை சொல்லி இருந்தார்.
அந்த கதையில் பெண்ணின் இடுப்பை தான் தொட்டதை பற்றி அவர் கூற அந்த கதையைக் கேட்ட பின்னர் சக போட்டியாளர்களும் ஒரு பெண்ணின் இடுப்பை கிள்ளுவதை எப்படி பெருமையாக கூறலாம் என்று வி வாத த்தை துவங்கி விட்டனர். அதே போல பவா செல்லத்துரையிடம் பேசிய பிரதீப் ‘நீங்கள் எனக்கு குரு போன்றவர். நீங்கள் என்ன செய்தாலும் நான் த வறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால், நீங்கள் எச்சை துப்புவதை நிறுத்துங்கள் என்று கண்ணீருடன் கூறினார். ஆனால், பவா செல்லத்துரையோ நான் யாருக்காகவும் என் சுபாவத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்றய நிகழ்ச்சியில் Know Your Housmates என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சமூக வலைதளத்தில் தான் ஏன் பிரபலம் ஆனேன் என்று போட்டியாளர் தனது சக போட்டியாளருடன் வி வாதிக்க வேண்டும். வி வாத த்தில் யார் வெல்கிறார்களோ அவர்கள் Verified செய்யப்படுவார்கள். அந்த வகையில் விஷ்ணுவும் – மாயாவும் இந்த டாஸ்க்கீல் விவாதிக்க விஷ்ணு ஒரு கட்டத்தில் டாஸ்க்கை விட்டு விட்டு மாயாவின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசியது கொஞ்சம் ச ர் ச்சையானது.
இப்படியாக நேற்றையை எபிசோட் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஷாப்பிங் ரீ பேமண்ட் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் ரீபாஸ். மேலும் இந்த டாஸ்கில் தோற்று விட்டால் மேக் கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து எடுத்து செல்லப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார். மேக் அப் பொருட்கள் இல்லாமல் பெண்கள் எப்படி சமாளிக்க போகிறார்க்ளோ என்று தெரியவில்லை.
#Day4 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/kXU1bq3FV0
— Vijay Television (@vijaytelevision) October 5, 2023