மேக்கப் விஷயம் குறித்து ஜோவிகா கேட்ட நச் கேள்வி…!! இளம் வயதில் இப்படி ஒரு பக்குவமா ? இணையத்தில் வை ர லாகும் வீடியோ…!!

Big Boss videos

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேக்கப் குறித்து ஜோவிகா கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக மூன்று நாட்கள் கடந்து இன்று 4ம் நாள் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. முதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. அதோடு இந்த முறை நிகழ்ச்சி முதல் நாளே  க ல வரம் தொடங்கி விட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே ஜோவிகா, தனக்கு படிப்பு வராது என்று சொன்னவுடன் சீனியர்ஸ் நடிகர்கள் எல்லோரும் படிப்பு குறித்து அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார்கள்.

அது மட்டும் இ ல் லா மல் தொடர்ந்து விசித்திரா, யுகேந்திரன் இருவரும் படிப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஜோவிகா யாருடைய மனமும் பு ண்படாத வகையில் வேறு ஏதாவது என்று டாப்பிக்கை டைவர்ட் செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இது தொடர்பாக வனிதாவும் ஜோவிகாவை பாராட்டி பதிவு போட்டிருந்தார். மேலும், ஜோவிகா நேர்மையாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடி கொண்டு வருகிறார்.

பின் நேற்றைய டிபேட் டாஸ்க்கில் கூட ஜோவிகா கண் க ல ங்கி எமோசனலாக பேசி இருந்தார். இவர் பேசியதைக் கேட்டு அங்கு இருந்த பிற போட்டியாளர்கள் அவரை கைதட்டி பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோ ல் வி பெற்றால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் வாங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

பின் இரண்டாவது ப்ரோமோவில் பிரதீப் ஆண்டனி பெண்கள் மேக்கப் போடக் கூடாது என்று கூறியிருந்தார். இதனால் சில பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மேக்கப்பும் எடுத்து இருக்கிறார்கள். ஜோவிகாவிடம் கூல் சுரேஷ் மேக்கப் குறித்து பேசுகிறார். உடனே ஜோவிகா, மேக்கப் என்பதும் ஒரு கலை. மேக்கப் போட்டால் என்ன பி ர ச் ச னை என்று கேட்கிறார். உடனே ஸ்கூல் சுரேஷ், மேக்கப்பை நான் த வ றாக சொல்லவி ல் லை. மேக்கப் இல்லாமல் இருந்தால் ஒரிஜினல் முகம் தெரியும் என்று சொன்னார்.

நாங்கள் மேக்கப் போட்டாலும் ஒரிஜினலாகத் தான் இருக்கிறோம் என்று ஜோவிகா சொல்கிறார். பின் கூல் சுரேஷ் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்து ஜோவிகா கிளம்பி வந்து, பின் மற்ற பெண் போட்டியாளர்களிடம் போய் மேக்கப் குறித்து கூல் சுரேஷ் சொன்னதை ஜோவிகா சொல்லி விட்டு நான் மேக்கப்பை எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். இப்படி ஜோவிகா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே இந்த இளம் வயதில் ஜோவிகாவிற்கு இவ்வளவு பக்குவமும் முதிர்ச்சியும் குறித்து பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *