நடிகர் சிம்புவுக்கு 40 வயதாகியும் திருமணமாகாத நிலையில் கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தி இத்னானி.
படத்தில் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படத்தை தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சித்தி இதனானியிடம், சிம்புவும் நீங்களும் காதலிக்கிறீர்களா? நீங்கள் இருவரும் காதலிப்பது மாதிரியான தகவல் பரவுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சித்தி இதனானி, சமூக வலைத்தளங்களில் மற்றும் பத்திரிகைகளில் வரும் கிசுகிசு பத்தியெல்லாம் நான் யோசிக்க மாட்டேன்.
சினிமாவிற்கு வந்து விட்டால் இது போன்று பேசத் தான் செய்வார்கள். நிறைய விஷயம் நம்ம பத்தி நல்லதா வரும். சில விஷயங்கள் திடீர்னு தப்பா வந்துடும். அதுல உண்மை இல்லாட்டியும் அத நம்ப ஆரம்பிச்சுடுவாங்க. இந்த கிசு கிசுவெல்லாம் படிக்க நல்லா இருக்கும். ஆனால் அதை மைண்ட்ல ஏத்திக்கக் கூடாது என்று சித்தி இதனானி கூறியுள்ளார்.