விடாமுயற்சியில் கதாநாயகி மாற்றமா…? அட இவர்தானா நாயகி…!! இப்போதான் ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க… அதுக்குள்ள இப்படியா…?

Cinema News Image News

அதாவது படம் தொடங்கி சில நாட்களிலேயே விடாமுயற்சி படத்தில் கதாநாயகியை தற்போது மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில் 90 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது நடிப்புத் திறமையால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இ ல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிடப் பட்டது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்து இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க  இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அது மட்டும் இ ல் லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் தலைப்பு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. அஜித்தின் திரைப்பட வரிசையில் V என்ற வார்த்தை துவங்கும் டைட்டிலில் இது 10வது முறை. அதுமட்டுமி ல் லா மல் இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில்இருந்த எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளார். மற்றொரு கதாநாயகியாக ஹீமா குரேஷி ஒப்பந்தம் ஆகி இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன் ஆகிய  திரைப்படத்தில் நடித்த ரெஜினா கசண்டரா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *