கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் நடிகையின் திருமணம்…!! மாப்பிள்ளை யார் தெரியுமா…? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

General News Image News

தமிழ் சின்னத்திரையில் அதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே TRPயில் முதல் இடத்தை பிடித்துள்ள சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருபவர் ஹர்ஷலா.

இவர் சன் டிவியில் சுமார் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடிய சந்திரலேகா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிருங்கதா பென்னேரி, நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, சஞ்சு மாட்டு மற்றும் காவேரி போன்ற பல கன்னட சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் ஹர்ஷலாவுக்கு தொழிலதிபர் அரவிந்த் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது திருமண பு கைப்படத்தை நடிகையே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Yours Honey (@yours_harshala_honey)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *