பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.வி.கங்காதரன், கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக சில பி ர ச் ச னைகளால் அ வ திப்பட்டு வந்தார். மேலும் இவரின் உடல்நிலை மிகவும் மோ ச மா னதால் ஒரு வாரத்துக்கும் மேலாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சி கி ச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக்.13), அதாவது இன்று காலை 6 மணியளவில் காலமானார்.
இவர் கிரஹலட்சுமி புரொடக்ஷன்ஸ் என்கிற பெயரில் புரொடக்ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் 20க்கும் மேற்பட்ட பல மலையாள படங்களை தயாரித்துள்ளார். ‘ஒரு வடக்கன் வீரகதா’, ‘அசுவிண்டே அம்மா’, ‘தூவல் கொட்டாரம்’ போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.
தற்போது 80 வயதாகும் இவர், ஒரு தொழிலதிபர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு போட்டியிட்டார். மேலும் மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார். அதே போல் ஒரு தயாரிப்பாளராக, அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும் ஐந்து கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
இவரின் பிள்ளைகளான ஷேனுகா ஜெய்திலக், ஷெக்னா விஜில் மற்றும் ஷெர்கா சந்தீப் ஆகியோரும் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகின்றனர். தயாரிப்பாளர் பி வி கங்காதரனின் ம ர ண ம், தற்போது மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களை அ தி ர் ச் சியடைய வைத்துள்ளது. பலர் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு, இவரின் குடும்பத்தினருக்கு தங்களின் இ ர ங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.