நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள பில்டப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது, சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சந்தானம் நடிப்பில், சமீபத்தில் வெளியான ‘DD ரிட்டர்ஸ்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் உற்சாகமாகியுள்ள சந்தானம், தொடர்ந்து தன்னுடைய பாணியில் சில வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து விரைவில், சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ‘பில்டப்’ என்கிற படத்திலும் சந்தானம் தற்போது நடித்து வருகிறார். இந்த படம், 80-ஸ் காலகட்டத்தில் உருவாவது போல் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக, சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்த ப்ரீத்தி ராதிகா நடித்துள்ளார்.
இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த ராஜ், ரெடின் கிங்ஸ்லி, முனீஷ்காந்த், தங்கதுரை, நேகா உள்ள பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது ‘பில்டப்’ படத்தின், ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வை ர லாக பார்க்கப்பட்டு வருகிறது.
குலேபகாவலி உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜிப்ரான் இசையில், ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில், பரத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரின் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.