தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல் குடும்ப குத்து விளக்காக இருந்ததால் ரசிகர்கள் இவரை நடிகையாக ஏற்றுக் கொண்டார்கள். தற்பொழுது இவர் கையில் அரை டஜன் திரைப்படங்கள் இருந்து வருகிறது. ஆனாலும் இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் ஆகி கொண்டு தான் இருக்கிறார். தற்பொழுது உள்ள கால கட்டத்தில் வெளியாகும் பல திரைப்படங்களில் இவர் தான் ஹீரோயின் என்ற நிலைமை ஆகிவிட்டது.
இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். அது மட்டும் இ ல் லா மல் ஒரு மெகா பட்ஜெட் திரைப்படத்திலும் களமிறங்கியிருக்கிறார். அதே போல் பிரியா பவானி சங்கர் கேரியரிலேயே இதுதான் மெகா பட்ஜெட் திரைப்படம் என்று கூட சொல்லலாம். ஏற்கனவே அஜித் தற்பொழுது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரம் என்பதால் ஒரு அஜித்திற்கு த்ரிஷா ஜோடியாகவும், இளம் நடிகர் அஜித்திற்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகவும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் அஜித்துடன் நடிப்பது உறுதி ஆகி விட்டால் அவர் திரை பயணத்திலேயே மிக எளிதாக அஜித்துடன் நடித்த நடிகை என்ற அந்தஸ்தில் பிரியா பவானி ஷங்கர் இருப்பார்.